பருப்பு பிரதமன்
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – 1 கப்
அரிசி ரவை – 4 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 2 கப்
முதல் தேங்காய்ப்பால் – 2 கப்
இரண்டாம் தேங்காய்ப் பால் – 2 கப்
ஏலக்காய்தூள் – 2 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் பருப்பை வறுத்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன் அரசி ரவையையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டி, வெந்த பருப்பில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் இரண்டாவது தேங்காய்ப்பாலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, முதல் பாலை ஊற்றி ஏலக்காய்தூள், நெய் சேர்த்து பரிமாறினால் சுவையான பருப்பு பிரதமன் தயார் !!!