Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’… ரசிகர்களை கவரும் ‘ஹே ப்ரோ’ பாடல்…!!!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது . இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லிப்ட் படத்தின் 2-வது பாடலான ‘ஹே ப்ரோ’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |