இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எதிர்கட்சி காரர்கள் போனை ஒட்டு கேட்பதற்கு வரி பணத்தை செலவிடும் ஒன்றிய அரசிற்கு, மக்களுக்காக செலவு செய்யத்தான் மனசு வராது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். எனது மொபைலை பிளாஸ்திரி போட்டு ஒட்டிவிட்டேன். ஒன்றிய அரசையும் இதே போல பிளாஸ்டிக் போட்டு ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை நாசமாக்கி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.