Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்….? பதறிய கல்லூரி பேராசிரியர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கல்லூரி பேராசிரியரிடமிருந்து தங்க நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணிமுடிந்த பிறகு சாந்தி கல்லூரி வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பிறகு தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது சாந்தியை பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |