நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா அந்த ஊரில் இருக்கும் முப்புடாதி அம்மன் கோவில் சுற்று சுவரில் நண்பர்களுடன் இணைந்து ஏறி விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் சுவற்றில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.