மானை வேட்டையாடி அதன் இறைச்சி விற்க முயன்ற 2 வாலிபர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறை அதிகாரிகள் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்க முயன்ற குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் மாவீரன் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
மேலும் சட்டவிரோதமாக மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற குற்றத்திற்காக வனத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் இறைச்சியை கைப்பற்றி அப்பகுதியில் அதைப் புதைத்து விட்டனர்.