Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்போதான் நிச்சயம் முடிஞ்சது…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு என்ற மகள் உள்ளார். இந்தப் இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் பானுவிற்கு திருமணம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் நிச்சயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பானு நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பானுவை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |