Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் ரஜினி அடுத்ததாக நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில்  சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீசாக உள்ளது.

Deepika Padukone joins WEF list of Young Global Leader

இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினியின் 169-வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமடைந்த தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |