Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதை சமாளிக்க முடியாது…. கண்டன ஆர்ப்பாட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வைக் எதிர்த்து சி.பி.ஐ.எம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை எதிர்த்து சி.பி.ஐ.எம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளரான ரம்யா தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் மாதர் சங்கத்தின் துணைத் தலைவரான விமலா முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |