4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுபாளையம் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அவரின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து தேவராஜ் அந்த 4 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அந்த சிறுமி பயந்து தன்னுடைய வீட்டுக்கு ஓட முயன்றுள்ளார். ஆனால் தேவராஜ் தனது கையால் அந்த சிறுமியின் வாயை பொத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைப் பார்த்ததும் அந்த பகுதியில் செல்பவர்கள் சிறுமியை அவரிடமிருந்து மீட்டனர்.
ஆனால் அதற்குள் தேவராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அருகிலுள்ளவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் தகவல் அறிந்ததும் பதற்றமடைந்து வீட்டிற்கு விரைந்து வந்த அவரின் பெற்றோர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் சிறுமியின் பெற்றோர் அந்தியூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின் தலைமறைவாக இருந்த தேவராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.