Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… மாட்டிக்கொண்ட 4 பேர்… ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை வெவ்வேறு இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டி விளக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கமுதி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருவேலங்காடு பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் எருமைக்குளத்தை சேர்ந்த சக்திமுருகன்(40), மற்றும் பொட்டல்புளியை சேர்ந்த மாரிச்செல்வம்(22) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் எருமைக்குளம் விளக்கு பகுதியில் இஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 3 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இந்நிலையில் ஆட்டோவில் இருந்த கடுகுசந்தையை சேர்ந்த பாண்டி(38) மற்றும் கரிசல்புளியை சேர்ந்த செல்வி(42) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆட்டோ மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |