Categories
சினிமா தமிழ் சினிமா

தனது பிறந்தநாளில் மகனுக்கு பெயர் சூட்டிய யோகி பாபு… குவியும் வாழ்த்துக்கள்…!!!

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் யோகி பாபு தனது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், சூர்யா, போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பீஸ்ட், வலிமை, டாக்டர் உட்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த வருடம் நடிகர் யோகிபாபு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையாக இவர்கள் திருமணம் நடைபெற்றது.

 

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் யோகி பாபு ஆண் குழந்தைக்கு அப்பாவானார் . தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த யோகி பாபு திட்டமிட்டிருந்தார். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முந்தைய நாளே மஞ்சு பார்கவிக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் யோகி பாபு தனது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். தீவிர முருகன் பக்தரான யோகி பாபு தனது மகனுக்கு ‘விஷாகன்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். தற்போது பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |