Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடலான விற்கக்கூடாது …. கடை உரிமையாளர்களுக்கு …. ஆட்சியர் எச்சரிக்கை ….!!!

முககவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்தால் அந்த  கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நாகை மாவட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட வருகிறது. ஆனால் பொதுமக்கள் சிலர் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ,முக கவசம் அணியாமலும் அலட்சியமாக நடந்து கொள்கின்றன . இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்தால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறும்போது,’ முககவசம்  அணிதல் மற்றும் தனி மனித இடைவெளியியை  கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா  வைரஸ்     3-வது அலையில்  இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது அவ்வளவு எளிதாக இருக்காது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளின் உரிமையாளர்கள் கட்டாயம் முக கவசம் சமூக  இடைவெளி போன்ற கொரோனா விழிப்புணர்வை குறித்த பலகைகளை கட்டாயம் கடைகளில் வைக்க வேண்டும்.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினி கடைளில்  கட்டாயமாக வைக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே கடைகளில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட கடைகள் மீது அபராதம் விதிக்கப்பட்ட அந்த கடைக்கு சீல் வைக்கப்படும். இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு இனி வரும் காலங்களில் தீவிரமாக ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தக் குழுவினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான மார்கெட் மற்றும் கடைகளில் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு  அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் கொரோனா வைரஸ் , டெங்கு காய்ச்சல்  மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய் அறிகுறிகள் உள்ளவார்கள்  காய்ச்சல் முகாம்களில் இதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்ளலாம்’. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |