சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சூரரைப்போற்று . இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் 2d நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் அதன் ஹிந்தி ரீமேக்கையும் இயக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில் சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் .