காலை உயர்வுடன் தொடங்கிய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் புதிய உச்சம் அடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 11, 055_க்கு வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உயர்வுடேனே தொடங்கிய சிறிது நேரத்தில் வர்த்தகம் புதிய உச்சத்தை பெற்றது. மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற வணிகத்தின் படி .மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,663 அதிகரித்து 37,756_க்கும் ,தேசிய பங்குச்சந்தையான நிப்டி 525 புள்ளிகள் உயர்ந்து 11,230_க்கு வர்த்தகமாகி கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் இந்த உயர்வானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் அடைந்துள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முன்னதாக தொழில் துறையினருக்கு 1.45 லட்சம் கோடிக்கு மத்திய அரசு வரிச்சலுகை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.