ஓய்வூதியத்திற்கான ஐந்து சிறந்த முதலீட்டு திட்டங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
LIC சரல் ஓய்வூதிய திட்டம்
எல்.ஐ.சி சரல் ஓய்வூதிய திட்டம்ஒரு வருடாந்திர திட்டம். 40 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டுதோறும் முதலீடு என உங்களுக்கு ஏற்ற வகையிலான ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இதில், குறைந்தபட்சம் ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும், அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
தேசிய ஓய்வூதிய திட்டம்
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நிலையான ஓய்வூதியத்தைப் பெறலாம். மூன்று வருடங்களுக்கு முதலீடு செய்த பின்னர் பணத்தை எடுக்க வசதியும் உள்ளது. மொத்த வைப்புத் தொகையில் 25 சதவீதத்தை முதிர்வுக்கு முன்பு திரும்பப் பெறலாம். வீடு கட்டும் போது அல்லது பிற அவசர காலத்திலும் நீங்கள் பணத்தைஎடுக்கலாம்.
அடல் ஓய்வூதிய திட்டம்
பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்
இந்தத் திட்டம் 10 வருடங்களுக்கானது, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வயது 60 ஆக இருக்க வேண்டும். இதில், ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு, மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில், 7.40 சதவீத வட்டியைப் கிடைக்கும். இதில் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ .15 லட்சம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இதில் செய்யக்கூடிய அதிகபட்ச முதலீடு ரூ .15 லட்சம். இதில், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் திறக்க முடியும். இதில் 7.4 சதவீத விகிதத்தில் வருமானம் கிடைக்கும். இதில், ஒருவர் ரூ .1000 முதலீட்டில் தொடங்கலாம். அதன் குறைந்தபட்ச முதலீட்டு கால அளவு ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த திட்டதில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சேரலாம்.