செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே புதியதாக திறக்கப்பட்ட மதுபான கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு அருகே சாஸ்திரம் பாகம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. நேற்று இரவு அந்த கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு கல்லாவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டு லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களையும் கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.