5 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமிக்கு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் இரவு நேரத்தில் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த சிறுமிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் அந்த சிறுமியிடம் கேட்ட போது முதலில் அவர் சொல்வதற்கு பயந்துள்ளார். அதன்பிறகு நடந்தவற்றை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து விட்டனர்.