பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரின் காதலுக்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.