12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும், 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் திருப்தி இல்லாத மாணவர்களுக்கான விருப்பத்தேர்வு ஆகஸ்ட் 6 முதல் பத்தொன்பதாம் தேதி வரை நடைபெறும்.
தேர்வு எழுத விரும்புவோர் இன்று முதல் 27ஆம் தேதி வரை மாவட்டங்களிலுள்ள தேர்வுத் துறை உதவி இயக்குனரகங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் விருப்பத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும்.ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் தேர்வு எழுத முடியாது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.