ஒருவர் ஆதார் கார்டு காப்பியை வைத்து மற்றொருவர் வங்கிக் கணக்கை திறந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
ஆதார் கார்டு என்பது ஒரு தனிமனிதனின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டில் தனி நபரின் பெயர், முகவரி, மொபைல் நம்பர், பிறந்த தேதி உள்ளிட்ட பல தகவல்கள் உள்ளது. பலருக்கு இந்த சந்தேகம் இருக்கின்றது. ஒருவரது ஆதார் கார்டை இன்னொருவர் தவறாக பயன்படுத்த முடியுமா? ஏனெனில் வங்கி கணக்கு எண், பான் கார்டு, பிஎஃப் கணக்கு, மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளது. எனவே திருவடி ஆதார் கார்டை வைத்து கொண்டு அவரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முடியுமா என்ற சந்தேகம் இருக்கின்றது. இந்த சந்தேகங்களுக்கு ஆதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.
ஆதார் கார்டை வைத்துக்கொண்டு மற்றொருவரின் வங்கிக் கணக்கை திறந்தால் அதற்கு ஆதார் கார்டுக்கு சொந்தக்காரர் பொறுப்பு இல்லை என்று ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழலில் எந்த வங்கியில் தவறான வங்கி கணக்கு திறக்க படுகின்றதோ? அந்த வங்கி தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்கும் என தெரிவித்துள்ளது. ஒருவரது பெயரில் வங்கி கணக்கு திறக்கும் போது அவருடைய ஆதார் போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கி சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு வங்கி கணக்கை திறக்க வேண்டும். தற்போதைய சூழலில் வங்கிகள் அனைத்தும் KYC எனப்படும் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் நடைமுறையை பின்பற்றுகிறது. அதையும் தாண்டி மற்றொருவர் ஆதார் கார்டை வைத்துக்கொண்டு வங்கி கணக்கை திறப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படி பிறந்தநாள் அதற்கு முழு பொறுப்பு வங்கியே இன்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.