Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.10000 மேல் கிடைக்கும்… வருகிறது புதிய சட்டம்… குஷியோ குஷி…!!!!

சீனியர் சிட்டிசன்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பராமரிப்பு கட்டணம் பெறுவதற்கான மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அரசு  சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் முதலாவதாக பெற்றோர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் பராமரிப்பு மற்றும் நல மசோதா 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெற்றது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் முதியோர் இல்லங்களில் தள்ளப்படுவதை தடுப்பதற்காக அவர்களின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவில் சில திருத்தங்களை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜூலை 19ஆம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தால் சீனியர் சிட்டிசன்களுக்கு மாதம் 10,000 ரூபாய்க்குமேல் பராமரிப்பு கட்டணம் பெறுவார்கள் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |