தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்த கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும் . தமிழகத்தில் குட்கா இல்லை என்ற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.