Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முடி வெட்டுவதற்காக சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மினி வேன், சைக்கிளின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்து தொழிலாளி பலியாகி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மானங்காத்தான் பகுதியில் ராஜரத்தினம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பீட்டர் என்ற மகன் இருக்கின்றார். இவர் பசுவந்தனை பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பீட்டர் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருமலாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினிவேன் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டு அவரின் பின்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவரின் மீது மோதி அப்பகுதியில் நின்றது. இந்த விபத்தில் பீட்டர் பலத்த காயமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர்  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பீட்டரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து விபத்தில் உயிர் இழந்த முதியவர் யார் என்பது குறித்து நடத்திய விசாரணையில் அவர் ஓனமாக்குளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த செல்லத்துரை என்பதும் அவர் முடி வெட்டுவதற்காக சென்றதும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் செல்லத்துரையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்திய மினி வேன் டிரைவரான பூல் பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |