சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிரான வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் மனு தாக்கல் செய்தார. அதில்,
தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும். , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என்ற உச்சநீதிமன்ற கொலீஜிய உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். மேலும் இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீதான விவகாரத்தில் முடிவெடுக்கும் பட்சத்தில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உகந்ததா ? இல்லையா ? என்பது பற்றிய உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்ததோடு, உச்ச நீதிமன்றத்தை தஹில் ரமாணி நாடலாம் என்றும் தெரிவித்துள்ளது.