Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,தேனி,திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி,திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை,திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |