Categories
உலக செய்திகள்

உளவு பார்க்கப்படும் தலைவர்கள்…. தொலைபேசியை மாற்றிய அதிபர்…. பரவும் அதிர்வலைகள்…!!

பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபர் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் இமானுவேல் மேக்ரோன் தொலைபேசி மற்றும் அதன் எண்ணையும் மாற்றியுள்ளார்.

உலக அளவில் பல்வேறு முக்கிய தலைவர்களின் தொலைபேசிகள் பெகாசஸ் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.  பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் இந்த பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவரின் ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இமானுவேல் மேக்ரோன் அவரின் தொலைபேசி மற்றும் அதன் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் அவரது தொலைபேசி கண்காணிக்கப்படுவதாக அர்த்தமில்லை.

அவரின் பாதுகாப்பு நலன் கருதியே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் பிரான்ஸ் நாட்டு அதிபரை தவிர மற்றும் பல தலைவர்களான தென் ஆப்பிரிக்க அதிபர் சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், எகிப்து அதிபர் முஸ்தபா மட்பெளலி,  மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி, ஈராக் அதிபர் பர்ஹம் சாலி போன்றோரின் தொலைபேசிகளும் உளவு பார்ப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |