Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதற்காக இப்படி செய்யணுமா….? மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

முன்விரோதம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பாலக்காட்டூர் பகுதியில் அசேன் சேட்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட இவரை சில மர்மநபர்கள் தலையில் கல்லை போட்டு கொடூரமாக எரித்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அசேன் சேட்டை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது அமராவதி நகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடையில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மன நலம் பாதிக்கப்பட்ட அசேன் சேட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பிரகாஷின் முகத்தில் எச்சில் துப்பியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இதனையடுத்து நஞ்சப்பாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அசேன் சேட்டுக்கும் பிரகாஷிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மனநலம் பாதிக்கப்பட்ட அசேன் சேட்டுவை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்து அருகில் உள்ள துணிகளை அவரது உடலின் மேல் போட்டு தீ வைத்து எரித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |