Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பூஜைக்கு சென்றபோது… பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் வெள்ளி தோடுகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்காணி பகுதியில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இவர் இந்தக் கோவிலில் அம்மன் உள்ள கருவறையை தினமும் சுத்தம் செய்து பூஜை போடுவது வழக்கம்.

இந்நிலையில் சண்முகம் வழக்கம்போல் அம்மனின் கருவறை சுத்தம் செய்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யும்போது அம்மன் கழுத்தில் இருந்த பொட்டு தாலி மற்றும் காதில் இருந்த வெள்ளி தோடு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகியான பரமசிவம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் வெள்ளி தோடு ஆகியவற்றை திருடி தப்பித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |