Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உள்ளே சென்று விட்டு திரும்பிய போது… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிள் திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேரி காலனி பகுதியில் ஜோக்கின் மச்சாது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெல்சிட்ரா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பெல்சிட்ரா ஆலயத்திற்குள் செல்ல தனது மோட்டார் சைக்கிளை பின்பகுதியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து பெல்சிட்ரா ஆலயத்திற்குள் சென்று விட்டு வெளியே திரும்பிய போது தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகு பெல்சிட்ரா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் செல்சினி காலனி பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பதும், அவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் திருடிய குற்றத்திற்காக சுதாகரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |