கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் காட்டப்படாத 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு.