இந்தியாவை போன்று சீனா தனது எல்லைப்பகுதியை பாதுகாப்பதற்கு திபெத்திய இளைஞர்களை பணியமர்த்த இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே 1962ல் போரானது நடைபெற்றது. இந்தப் போருக்குப் பின் மத்திய கேபினட் செயலாக்கமானது சிறப்பு முன்னணி படை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பில் இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய திபெத்தியர்கள், தலாய்லாமாவின் தலைமையிலுள்ள மாணவர்கள் இடம்பெற்றுவுள்ளனர். இவர்களுக்கு அமெரிக்க கண்காணிப்புத்துறையும், இந்திய ராணுவமும் பயிற்சி அளித்துள்ளனர். இந்த படையில் உள்ளவர்கள் மலைப்பிரதேச வழிகள் நன்றாக அறிந்தவர்கள். எனவே இந்திய எல்லைகளில் உள்ள ராணுவத்திற்கு உதவி புரிகின்றனர். இதனை அடுத்து கடந்த ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் சீனர்கள் அத்துமீறினர்.
அப்போது சிறப்பு முன்னணி படையினர் மலை சிகரங்களான மோக்பரி, பிளாக் போன்றவற்றை கைப்பற்றுவதில் இந்திய ராணுவத்திற்கு உதவியுள்ளனர். இந்த சம்பவமானது சீனர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீனாவும் இந்தியாவை பின்பற்றி எல்லையோர காவல் பணிகளுக்கு திபெத்தியர்களை நியமனம் செய்யப் போவதாக கூறியுள்ளனர்.இதனை அடுத்து திபெத் பகுதியில் உள்ள ஒரு இளைஞர் கட்டாயமாக ராணுவத்தில் சேர வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து உளவுத்துறையினர் இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
அதில் “சீனாவின் எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதற்கு திபெத்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகும். சீனா எல்லையில் இராணுவ ஆள் சேர்க்கும் முகாம்களில் திபெத்திய குடும்பத்திலுள்ள ஒரு இளைஞர் நியமனம் செய்யப்படுவர் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்த பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் சீன ராணுவ முகாமில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி மற்றும் ரோந்து பணிக்கு உதவும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.