Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க…. மீண்டும் பேருந்துகளில் …. பக்தர்கள் மகிழ்ச்சி…!!!

திருப்பதியில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு மூலம் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசனத்திற்காக நுழைவு முன்பதிவு டிக்கெட்டுகள்  https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 300 ஆகும்.

இந்நிலையில் ஆந்திர அரசு பேருந்துகளில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆயிரம் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படும் என்று மாநில போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |