பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹாஷ்டாக் பதிவிட்டது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது.இதில் நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை நேரடியாக சாடினார்.
பின்னர் ரசிகர்களை ஊக்கபடுத்தும் விதமாக பேசிய விஜய் பேனரால் இறந்த சுபஸ்ரீ போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க , சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.நடிகர் விஜய் சொல்லி விட்டார் என்று உள்வாங்கிய ரசிகர்கள் அடுத்த நொடியே #JusticeForSubaShree என்ற ஹாஸ்டக்கை தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.இதனால் #JusticeForSubaShree என்ற ஹாஷ்டாக் ட்வீட்_டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.