Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’… சூர்யாவின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’… ஸ்பெஷல் வீடியோ…!!!

நவரசா வெப் தொடரில் சூர்யா நடித்துள்ள கிட்டார் கம்பி மேல நின்று படத்தின் பாடல்கள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். 9 முன்னணி இயக்குநர்கள் இணைந்து தனித்தனியாக உருவாக்கியுள்ள குறும்படங்களில் தொகுப்பு தான் நவரசா. கோபம், கருணை, சிரிப்பு, காதல், அமைதி போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த்சாமி, ரேவதி, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள கிட்டார் கம்பி மேலே நின்று படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரயாகா மார்டின் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிட்டார் கம்பி மேல நின்று படத்தின் பாடல்கள் அடங்கிய ஸ்பெஷல் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . மேலும் வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி நவரசா வெப் தொடர் நெட்பிலிக்சில் வெளியாக உள்ளது.

Categories

Tech |