தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அவருடைய வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்னும் ஓரிரு நாளில் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.