உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அதன்பிறகு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சங்க தலைவரான சரவணன் என்பவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மாரி செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.