அமீரகத்தில் “கிளவுட் சீடிங்” முறை மூலம் மழைப்பொழிவு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“கிளவுட் சீடிங்” எனப்படுவது விமானம் மூலம் வானிற்கு கொண்டு செல்லப்படும் ரசாயன உப்புகளை தாழ்வாக இருக்கும் மேகங்களில் தூவுவது ஆகும். இதனால் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதற்காக பீச் கிராப்ட் கிங் ஏர் சி-90 என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 247 முறை கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அமீரகத்தில் கிளவுட் சீடிங் செய்வதற்கு உரிய காலம் எனவும், இந்த மூன்று மாதங்களுக்கு பிறகு அமீரகத்தில் நல்ல மழை பொழிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் 30 முதல் 35 சதவீதம் வரை வழக்கமாக பெறப்படும் மழை பொலிவை விட அதிக அளவு மழை பொழிவை பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் வேறு எந்த தொழில்நுட்பமும் இந்த அளவிற்கு உருவாக்கப்படவில்லை என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பிரிவின் இயக்குனர் “ஓமர் அல் யஜீத்” கூறியுள்ளார். மேலும் இந்த “கிளவுட் சீடிங்” முறை மூலம் அமீரகத்தில் மழை பொழிவு அதிக அளவு பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.