விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
TEASER AT 6PM , ON 24TH JULY
It’s time to land few punches on my next #Enemy @VishalKOfficial 🥊 🥊#ENEMYTEASER
@anandshank @vinod_offl @MusicThaman @SamCSmusic @RDRajasekar @prakashraaj @shankaruppusamy @mirnaliniravi @mamtamohan @RIAZtheboss @gopiprasannaa @baraju_SuperHit pic.twitter.com/I3FzHL5R0I
— Arya (@arya_offl) July 23, 2021
மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் எனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்த டீசருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.