Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டு வந்த ரிஷப் பண்ட்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த  இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்தபட்டார். இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்தார். அவரை சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இவருக்கு பதிலாக பயிற்சி ஆட்டத்தில் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது.

Categories

Tech |