Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. மாதர் சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தூரில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் சமையல் எரிவாயுக்கு மாலை அணிவித்து பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும் தட்டுப்பாடு இன்றி தமிழ்நாடு அரசுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாதர் சங்க உறுப்பினர்கள் கண்மணி, சுலோச்சனா, கஸ்தூரி, கீர்த்தனா, குமாரி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |