புலியின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் தனியாக வெளியே வரக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ங்கணகொல்லி கிராமத்தில் கிருஷ்ணன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி கிருஷ்ணனை புலி அடித்துக் கொன்று விட்டது. இந்நிலையில் அந்த கிராமத்தில் இருந்த புதர்களை வனத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வனத்துறையினர் பொருத்திய சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு தனியாக வெளியே வரக்கூடாது என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் பொது மக்கள் கூட்டமாக நடந்து செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.