ஆஸ்திரேலிய நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் சிட்னி போன்ற சில முக்கிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே
ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே தற்போது அவர் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். எனினும் ஆஸ்திரேலியா, பணக்கார நாடு என்பதால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அரசு, தடுப்பூசி செலுத்துவதில் அக்கறை காட்டாமல் தாமதப்படுத்தி வருகிறது. அது தான் தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது வரை நாட்டில் 11% நபர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது பொருளாதார ரீதியாக முன்னிலையில் இருக்கும் நாடுகளின் தடுப்பூசி பணியில் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் அதிபர் கூறியுள்ளதாவது, “இந்த வருட ஆரம்பத்தில் இத்தனை சதவீத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்.
எனினும், தற்போது அதனை செயல்படுத்த முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி செலுத்தும் பணியின் பொறுப்புகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.