Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு துணிச்சல்…. வசமா சிக்கிய 6 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் வந்து சென்றதையடுத்து கேட்  திறக்கப்பட்டு நெடுஞ்சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டது. அப்போது நீடாமங்கலம் வெண்ணாறு பாலம் உழவர்சந்தை அருகில் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கிச் செல்லும் அரசு விரைவு பேருந்து நகர்ந்து வந்தது. அதே நேரத்தில் எதிரே வந்த 3 மோட்டார் சைக்கிள்கள் பேருந்துக்குள் சிக்கி சேதமடைந்தது. ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்.

இதனையடுத்து அங்கு இருந்த சிலர் அரசு பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்ததால் டிரைவரான மணக்கரை ஓவர்ச்சேரியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் காயமடைந்தார். அதன்பின் இளங்கோவனை அருகில் இருப்பவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்திய பின் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த கொட்டையூர் சர்வமான்யம் பகுதியைச் சேர்ந்த கலையரசன், சதீஷ்குமார், மாதவன், மணிகண்டன், சுந்தர்ராஜ், மேலபூவனூரை சேர்ந்த சபரிநாதன் போன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |