நெத்திலிக் கருவாடு கிரேவி
தேவையான பொருட்கள் :
நெத்திலி மீன் கருவாடு – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் நெத்திலி கருவாட்டை வெந்நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள் , சிறிது தண்ணீர் மற்றும் நெத்திலிக் கருவாடு சேர்க்க வேண்டும். கருவாடு வெந்து கிரேவி கெட்டியானதும் இறக்கிப் பரிமாறினால் சுவையான நெத்திலிக் கருவாடு கிரேவி தயார் !!!