மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை கண்டித்தும் பாதுகாப்புத் துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச அமைப்பின் செயலாளரான தர்மன் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளரான மோகன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி உமாபதி சிவன், வீரை கிருஷ்ணன், எச்.எம்.எஸ் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.