Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதோட 2 முறை நடந்துருக்கு…. அட்டகாசம் செய்யும் விலங்குகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

கோவிலுக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் இந்த கோவிலுக்குள் புகுந்த கரடிகள் பூஜை பொருட்களை அங்கும் இங்கும் வீசிவிட்டு எண்ணையை குடித்து சென்றுள்ளது. இதனை அடுத்து மறு நாள் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பூஜை பொருட்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .

இதனையடுத்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இதுவரை 2 முறை கரடிகள் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இதுகுறித்து வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |