மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கனமழை பெய்துள்ளது.
மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாகவே கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கடுமையான கனமழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கன மழையால் சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கடுமையான பீதியிலுள்ளார்கள். மேலும் மத்திய சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை சுமார் 25 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
இதற்கிடையே 2,00,000 பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தின் நிலைமை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.