அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா என்ற நகரத்தில் மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை அமைக்கப்பட்டிருப்பதை மக்கள் உற்சாகமாக கண்டுகளிக்கிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது. அதன்படி அட்லாண்டா நகரத்தின் மையப்பகுதியில் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இலுமினாரியம் என்ற மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் சுவர்கள் சுமார் 20 அடிக்கு எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் ப்ரொஜெக்ட்டரை வைத்து காட்டுப்பகுதியில் விலங்குகள் நடமாடுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. ஒட்டகச்சிவிங்கிகள் உண்பது, சிங்கங்கள் சண்டை போடுவது, பிளமிங்கோ பறவைகள் பறந்து செல்வது போன்றும் உயிரோட்டமாக நேரில் வனவிலங்குகளை பார்ப்பது போன்று உள்ளது.
அரங்குகளில் இருந்துகொண்டே விலங்குகளை காணொலிக் காட்சி மூலமாக பார்த்து ரசிக்கலாம். அங்கு செல்லும் மக்கள் வித்தியாசமான மற்றும் உற்சாகமான அனுபவத்தை பெற்றதாக கூறுகிறார்கள். மக்கள் இதனை அதிகம் விரும்பியதால் பல்வேறு நாடுகளிலும் இந்த காட்சி சாலையை கொண்டு வரப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.