Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஆடி மாதம் திருவிழா” யாரும் இப்படி பண்ணக்கூடாது…. ஆலோசனை கூட்டத்தில் முடிவு….!!

ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஆடு, கோழி பலியிட ஆலோசனை கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வெட்டுவாணம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமைகளில் இருந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தேர் திருவிழா, தெப்பதிருவிழா போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆடி பெருவிழா நடத்துவதற்கு அரசு தடை விதித்தது. இதனையடுத்து இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக ஆடி பெருவிழா நடத்த அரசு தடைவிதித்தது. இந்நிலையில் ஆடித் திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை தாங்கினார்.

இதனைதொடர்ந்து அணைக்கட்டு துணை தாசில்தார் பழனி முன்னிலையில், கோவில் செயல் அலுவலர் வடிவேல் துரை வரவேற்றுப் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கும் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு முறையும் 20 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிடவும், பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இறுதியில் கோவில் தலைமை எழுத்தர் பாபு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |